நேர்மையான தமிழக ஐஏஎஸ் அதிகாரி ‘திடீர்’ ராஜினாமா

/files/detail1.png

நேர்மையான தமிழக ஐஏஎஸ் அதிகாரி ‘திடீர்’ ராஜினாமா

  • 0
  • 0

-தமிழில் V.கோபி

ஆட்சி நிர்வாகத்தை சீர்திருத்தும் எண்ணம் கொண்டு 2004ம் ஆண்டு ஐஏஎஸ் பதவியில் சேர்ந்த விஜய் மாருதி பிங்கலே, 14 வருடங்கள் கழித்து தனது முயற்சிகளை கைவிட்டு தான் வகித்து வந்த ஐஏஎஸ் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழக பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான பிங்கலே மருத்துவ பட்டதாரி ஆவார்.

சில நாட்களுக்கு முன் தனது ராஜினாமாவை சமர்பித்த பிங்கலே, தனது விருப்பத்திற்கேற்ப அரசு சாரா அமைப்பில் சேர்ந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளார். இதற்கிடையில் அவரது ராஜினாமாவை தமிழக அரசு இன்னும் ஏற்கவில்லை.

2013ம் ஆண்டு சென்னை மாநகராட்சியின் உதவி ஆணையராக பிங்கலே பணியாற்றிய சமயத்தில் முதன்முதலாக மக்கள் கவனத்திற்கு வந்தார். கட்டுமான திட்டங்கள் குறிப்பாக சாலைகள், பாலங்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள் போன்ற வேலைகளில் நடைபெறும் குறைபாடுகளை கண்டுபிடிக்கவும் களையவும் தொழில்நுட்பத்தை புகுத்தினார்.

இவரது பதவிகாலத்தில் சாலை அமைக்கும்போது விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடிக்காத ஒப்பந்தகாரர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதன்காரணமாக மக்கள் ஆதரவை பெற்றார். குடிமை பணிகளின் போது களத்தில் நடைபெறுவதை நிகழ் நேரத்தில் காண்பிக்கும் வகையில் டிஜிட்டல் திரையை உருவாக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை ஈடுபடுத்தினார். 

சாலை தரத்தை ஆய்வு செய்ய இவர் நியமித்த சிறப்பு பொறியியலாளர் குழு சென்னையில் புதிதாக போடப்படும் சாலைகளில் 30 சதவிகித சாலைகள் ஒரு வருடத்திற்குள் சேதமாகி விடுவதாக கண்டுபிடித்துள்ளது.

மேலும் சென்னையில் பொது கழிப்பறைகளை பேணுவதில் நடைபெறும் பல ஊழல்களை இவர் வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல் மக்களிடம் முறைகேடாக கட்டணம் வசூலித்தவர்கள் மீது நடவடிக்கையும் எடுத்துள்ளார். இதனால் எதிர்பார்த்தபடியே சென்னை மாநகராட்சியில் இருந்து தொழில் துறைக்கு மாற்றப்பட்டார். ஒப்பந்ததாரர்கள் அரசிற்கு கொடுத்த அழுத்தம் காரணமாகவே பிங்கலே மாற்றப்பட்டதாக பலரும் கூறுகின்றனர்.
தொழில் துறையின் இனை செயலராக இருந்த பிங்கலே, சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டை வெற்றிகரமாக ஒருங்கிணைத்தார்.
அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், பிங்கலே தன் மனதிற்கு பிடித்தமான -- தொழில்நுட்பத்தின் மூலமாக ஆட்சி நிர்வாகத்தை

செழுமைபடுத்தும் -- துறையில் ஈடுபட்டுள்ள அரசு சாரா அமைப்பில் சேர உள்ளதாக தெரிவிக்கின்றனர். அவரது நன்பரும் ஐஏஸ் அதிகாரியுமான இஸ்ரேல் ஜெபசிங் கூறுகையில், “அவரது ராஜினாமாவால் நேர்மையான ஐஏஸ் அதிகாரியை தமிழகம் இழந்துள்ளது” என்றார்.
 

நன்றி : THE HINDU

Leave Comments

Comments (0)