அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதார் எண் தேவையில்லை: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அதிரடி

/files/detail1.png

அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதார் எண் தேவையில்லை: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அதிரடி

  • 0
  • 0

 

அரசின் நலத்திட்டங்கள் பெற ஆதார் எண் தேவையில்லை: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் அதிரடி

விதவைகள் மற்றும் ஓய்வூதியர்கள் அரசாங்க நலதிட்டங்களையும் நிதியையும் பெறுவதற்கு ஆதார் எண் தேவையில்லை என ஆம் ஆத்மி ஆட்சி புரியும் டெல்லி அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. மேலும் இதற்குமுன் ஆதார் எண் சமர்ப்பிக்காமல் இருந்தவர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த ஓய்வூதிய தொகை அனைத்தும் அவர்கள் வங்கி கணக்கில் விரைவில் செலுத்தப்படும் எனவும் அந்த ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தங்கள் வங்கி கணக்கோடு ஆதார் எண்ணை இணைக்க முடியாத்தால் பலரும் இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். ஆகவே இன்றுமுதல் விதவை மற்றும் ஓய்வூதிய நிதியை பெறுவதற்கு ஆதார் தேவையில்லை என அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக” டெல்லி முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டெல்லி அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஆதார் இல்லாதவர்களுக்கு நிறுத்தப்பட்டிருந்த தொகைகள் அனைத்தும் முறையாக வழங்கப்படும். தொழில்நுட்ப கோளாறுக்காக அல்லது அரசாங்க அமைப்பின் தோல்விக்காக மக்களுக்கு அபராதம் விதிக்க முடியாது. ஆகவே ஏப்ரல் மாத்ததை கணக்கிட்டு அனைத்து ஓய்வூதியர்களுக்கும் பழைய தொகையே செலுத்தப்படும். டெல்லியில் ஐந்து வருடத்திற்கும் மேல் வாழும் வருடத்திற்கு ஒரு லட்சத்திற்கும் குறைவான குடும்ப வருமானம் உள்ள அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இந்த ஓய்வூதிய தொகையை டெல்லி அரசாங்கம் கொடுக்கிறது” என்கிறார்.

60 முதல் 69 வயதிற்குள்ளானவர்களுக்கு மாதம் 2000 ரூபாயும் 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 2500 ரூபாயும் அதுவே SC/ST பிரிவினராகவோ சிறுபாண்மை மதத்தினராகவோ இருந்தால் 3000 ரூபாயும் ஓய்வூதியமாக டெல்லி அரசாங்கம் வழங்கி வருகிறது. மொத்தமாக 4.18 லட்ச மூத்த குடிமக்கள் இந்த ஓய்வூதிய நிதியை பெறுகிறார்கள். மேலும் 77,542 ஊனமுற்றோர்களும் அரசிடமிருந்து உதவியை பெற்று வருகிறார்கள்.
2016ம் ஆண்டிலிருந்து நலத்திட்ட உதவிகளை பெற ஆதார் எண் கட்டாயமாக்கியதால் இதுவரையில் 33,191 ஓய்வூதியர்களும் 9,799 ஊனமுற்றோர்களும் தங்களுக்கு வரவேண்டிய தொகையை பெறாமல் உள்ளனர்.

ஆதார் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்தே பிரச்சனைக்குரியதாக உள்ளது. ஆதார் எண்ணால் நமது அந்தரங்க தகவல்கள் கசியக்கூடும் என பல செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், நலத்திட்டம் என்ற பெயரில் இன்று ஆதார் நமது கழுத்தை நெறித்து கொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கும் அரசின் உதவி தேவைபடுபவர்களுக்கும் பாதுகாப்பானதாக அமையும் என்றே ஆதார் திட்டம் அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால் ஆதாரினால் ஏற்படும் பல பிரச்சனைகள் இவர்களுக்கே ஏற்படுகிறது.

ஓய்வூதியம் மற்றும் இதர நலத்திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமில்லை என ஏற்கனவே ஆதார் முகமை கூறியுள்ளது. உச்சநீதிமன்றமும் இதனை பலமுறை அறிவுறுத்தியுள்ளது. இதனை டெல்லி அரசாங்கம் தற்போது செயல்படுத்துவது மிகவும் நல்ல விஷயமாகும்.

https://thelogicalindian.com/news/aap-govt-delink-aadhaar/

Leave Comments

Comments (0)